சங்கராபுரம் அருகே: விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை


சங்கராபுரம் அருகே: விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
x
தினத்தந்தி 23 Oct 2018 3:30 AM IST (Updated: 22 Oct 2018 10:57 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

சங்கராபுரம், 

திருவண்ணாமலை மாவட்டம் பெருந்துறைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 39). இவருக்கும் சங்கராபுரம் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த கோவிந்தன் மகள் புஷ்பவள்ளிக்கும்(33) கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். தற்போது செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் சமத்துவபுரத்தில் தங்கியிருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.

செல்வராஜ் தினமும் மதுகுடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்றும் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து செல்வராஜ், வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செல்வராஜின் தந்தை கோவிந்தராஜ் சங்கராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story