திருமானூர் மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் ஜி.கே. வாசன் பேட்டி
திருமானூரில் மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் விரகாலூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நவம்பர் மாதம் 25-ந்தேதி அரியலூரில் பொதுக்கூட்டம் நடைபெறும். காவிரி, கொள்ளிடம் ஆற்றில் அதிகமாக நடைபெறும் மணல் கொள்ளையால் தான் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது என மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஆகையால் இதுபோன்று நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள மணல் குவாரியை நிரந்தரமாக தமிழக அரசு மூட வேண்டும்.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் விலை வீழ்ச்சியடைந்து சின்ன வெங்காயம் கிலோ ரூ.2-க்கு விற்பதால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை தமிழக அரசு கருத்தில் கொண்டு கிலோ ரூ.30, ரூ.40-க்கு சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும். அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
சாலை டெண்டர் வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த வழக்கில் சந்தேகம் இருப்பதால் தான் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. ஒரு முதல்-அமைச்சர் மீது நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பது அந்த அரசுக்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கே மிகப்பெரிய இழுக்கு. இதுபோன்ற நிகழ்வுகளினால் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் கூடிக்கொண்டே இருக்கிறது.
இதுநாள் வரை சபரிமலைக்கு பெண்கள் பம்பை வரை சென்று கொண்டுதான் இருந்தார்கள். பதினெட்டாம் படிக்கு மட்டுமே மக்களிடத்தில் அதிக தடை உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை மக்கள் உணர்வோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். சபரிமலையை பரிசோதனை கூடமாக மாற்ற நினைத்தால் அது ஒருபோதும் ஏற்புடையது அல்ல. மீ டூ விவகாரத்தில் குற்றம் சாட்டுபவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவருமே மனசாட்சிக்கு ஏற்றவாறு பொது வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ், அரியலூர் மாவட்ட தலைவர் குமார் என்கிற நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story