ரூ.1,184 முதல் ரூ.6,908 வரை கிடைக்கும்: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - நாராயணசாமி அறிவிப்பு


ரூ.1,184 முதல் ரூ.6,908 வரை கிடைக்கும்: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2018 4:30 AM IST (Updated: 23 Oct 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனசை முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 6–ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புதுவை அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசிதழ் பதிவு பெறாத பி–பிரிவு மற்றும் அனைத்து சி–பிரிவு ஊழியர்களுக்கு இந்த நிதியாண்டுக்கான போனஸ் வழங்குவதற்கான ஒப்புதலை எனது அரசு வழங்கியுள்ளது. இதற்கான அரசாணை நிதித்துறையின் மூலம் வெளியிடப்பட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் உடனடியாக வழங்கப்படும்.

இதன்படி அரசுத்துறைகளில் பணிபுரியும் பி–பிரிவு அலுவலர்கள் மற்றும் சி–பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் தொகை அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 908 வழங்கப்படும். 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு போனஸ் தொகை அதிகபட்சமாக ரூ.1,184 வழங்கப்படும்.

இதற்காக புதுச்சேரி அரசுக்கு ரூ.18 கோடி கூடுதலாக செலவாகும். உற்பத்தி சார்ந்த அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய போனஸ்தொகை குறித்த அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டவுடன் அதுகுறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story