பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும் என்று ஆலோ சனை கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி நகராட்சியில் ஏ, பி, சி, டி, என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாடுகளுக்கு சொத்து வரி வசூலிக்கப்படுகின்றது. இந்த நிலையில் சொத்து வரி சீராய்வு மேற்கொள்வது, மண்டலங்களை மறு மதிப்பீடு செய்வது மற்றும் தெருக்களை வரையறை செய்வது குறித்து ஆட்சேபனை தெரிவித்தவர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகராட்சி கமிஷனர் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர் சொத்து வரி உயர்வு மற்றும் மண்டலங்களை மறு மதிப்பீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தற்போது உள்ள மண்டலங்களை பிரிக்க கூடாது. மேலும் குறைந்தபட்சம் வரியை உயர்த்த வேண்டும். ஏற்கனவே கடந்த 1998-ம் ஆண்டு பொள்ளாச்சி நகராட்சியில் 300 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு 2008-ம் ஆண்டு 5 சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது 100 சதவீதம் உயர்த்துவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே குப்பைக்கு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. வீடு, வணிக நிறுவனங்களை முறையாக ஆய்வு செய்து வரி விதிக்க வேண்டும்.
கோவை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.2.10 காசு தான். ஆனால் பொள்ளாச்சி நகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.3.85 காசு வசூலிக்கப்படுகிறது. மாநகராட்சியை விட கூடுதலாக கடந்த 20 ஆண்டுகளாக வரி செலுத்தி வருகின்றோம். கடைகளில் போதிய விற்பனை இல்லாததால், பெரும்பாலான கடைகளை பூட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதனால் கடை வீதி குறுகி கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால் கடை வீதி காணாமல் போய் விடும். வாடகைக்கு, குத்தகைக்கு வசிப்பவர்களுக்கு சொத்து வரி தொடர்பான விண்ணப்பம் அனுப்பப்படுகிறது. அந்த விண்ணப்பங்களை உரிமையாளர்களுக்கு தான் அனுப்ப வேண்டும். அதிகப்படியான வரி உயர்வு கிளர்ச்சியை ஏற்படுத்தி விடும்.
மண்டலங்கள் பிரிக்கப்பட்டு உள்ளத்தில், வித்தியாசம் உள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில் 48 வீதிகள், மண்டலங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் வணிக நிறுவனங்கள் உள்ள, மண்டலத்தில் குடியிருப்பு பகுதிகள் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். எனவே குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும். குறைந்த பட்சம் 5 சதவீதம் மட்டும் வரியை உயர்த்த வேண்டும். கூட்டம் நடைபெறுவது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படுவதில்லை. அடுத்த கூட்டத்திற்கு அனைவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதுகுறித்து நகராட்சி கமிஷனர் கண்ணன் கூறியதாவது:-
நகராட்சியில் ஏ, பி, சி, டி ஆகிய 4 மண்டலங்களாக பிரித்து வரி வசூல் செய்யப்பட்டு வந்தது. தற்போது டி மண்டலம் கிடையாது. அந்த மண்டலத்தில் இருக்கும் நபர்களை சி மண்டலத்திற்கு மாற்றி உள்ளோம். அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளவாறு குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் மிகாமலும், குடியிருப்பு இல்லாத பிற கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும் சொத்து வரியை உயர்த்த கூடாது. மண்டலங்கள் மற்றும் தெருக்களை மறு சீராய்வு செய்வது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். குறைந்த சதவீதம் மட்டுமே சொத்து வரி உயர்வு செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மறுபரிசீலனை செய்யப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story