மயிலாடுதுறையில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து வணிகர்கள் உண்ணாவிரதம்


மயிலாடுதுறையில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து வணிகர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 24 Oct 2018 4:00 AM IST (Updated: 24 Oct 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், மத்திய-மாநில அரசுகளை கண்டித்து வணிகர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், தஞ்சை மண்டல தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மயிலாடுதுறை வர்த்தக சபை ஆகியன சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பேரமைப்பின் நாகை மாவட்ட தலைவர் ஏ.டி.எஸ்.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை வர்த்தக சபை தலைவர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார். பேரமைப்பின் மாவட்ட செயலாளர் நவநீதன் வரவேற்றார். இதில் பேரமைப்பின் தஞ்சை மண்டல தலைவர் செந்தில்நாதன் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

வணிகர்களை பாதிக்கும் வால்மார்ட், பிளிப்கார்ட் போன்ற நேரடி அன்னிய முதலீடு சட்டம், ஜி.எஸ்.டி. போன்ற வணிக விரோத சட்டம் ஆகியவற்றை எதிர்த்தும், வணிகர்களை முழுமையாக வஞ்சிக்கும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், வரலாறு காணாத பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரியும், மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைக்க கோரியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், பேரமைப்பின் மாநில துணை தலைவர்கள் சிவசுப்பிரமணியன், ஞானசேகரன், தென்னரசு, சுப்பு, நாகை தெற்கு மாவட்ட தலைவர் குணசேகரன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் மகேந்திரன், திருவாரூர் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன், மயிலாடுதுறை வர்த்தகசபை செயலாளர் சுரேஷ், பொருளாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரமைப்பு நாகை வடக்கு மாவட்ட பொருளாளர் துரை நன்றி கூறினார். 

Next Story