இலங்கை கடற்படை அத்துமீறல்; ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு


இலங்கை கடற்படை அத்துமீறல்; ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2018 10:45 PM GMT (Updated: 23 Oct 2018 8:03 PM GMT)

ராமேசுவரம் மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படை விரட்டியடித்தது. குட்டி கப்பலால் மோதியதில் மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்தன.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 500 படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் குட்டி கப்பலில் ரோந்து வந்தனர். அவர்கள் மீனவர்களை கண்டதும் அங்கிருந்து செல்லும்படி விரட்டினர்.

உடனே மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை எடுத்துக்கொண்டிருந்தனர். அதற்குள் படகில் இறங்கிய இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கினர்.

மேலும் குட்டி கப்பல் மூலம் மோதியதால், மீனவர்களின் சில படகுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரின் அத்து மீறல் நடுக்கடலில் தொடர்வதால் இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story