கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் 100 மூட்டை பச்சரிசியால் இன்று சாத்தப்படுகிறது


கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் 100 மூட்டை பச்சரிசியால் இன்று சாத்தப்படுகிறது
x
தினத்தந்தி 24 Oct 2018 4:00 AM IST (Updated: 24 Oct 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து இன்று சுவாமிக்கு 100 மூட்டை பச்சரிசியால் சுவாமிக்கு சாத்தப்படுகிறது.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேகம் இன்று (புதன்கிழமை) நடைபெறுவதையொட்டி பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள 13½ அடி உயரமும், 62 சுற்றளவும் கொண்ட பிரகதீஸ்வரர் சுவாமிக்கு 100 மூட்டை பச்சரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

மகா அபிஷேகம்

அன்னாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பிரகதீஸ்வருக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பிரதீஸ்வரருக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் பிரகன்நாயகி, மகிஷாசுரமர்த்தினி, சண்டிகேஸ்வரர் ஆகியவற்றுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அன்னாபிஷேக விழா கமிட்டியினர் மற்றும் இந்து சமய அறநிலையதுறையினர் செய்திருந்தனர்.


Next Story