வாக்குப்பதிவு எந்திரங்களை சரியாக ஆய்வு செய்ய வேண்டும் கலெக்டர் கணேஷ் அறிவுரை
வாக்குப்பதிவு எந்திரங்களை சரியாக ஆய்வு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் அறிவுறுத்தினார்.
புதுக்கோட்டை,
பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2019-ம் ஆண்டுக்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரப்பெற்றுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று கலெக்டர் கணேஷ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கலெக்டர் கணேஷ் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரப்பெற்றுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்யும் பணி கடந்த 10-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப்பெற்றுள்ள 3820 வாக்குப்பதிவு எந்திரங்கள், 2080 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் காகிதப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் மாதிரி வாக்குப்பதிவும், மேற்கொள்ளப்பட்டு அரசியல் கட்சியினருக்கு உரிய விளக்கமும் அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்யும் பணிகளில் பெல் நிறுவனம் சார்பில் 22 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த ஆய்வு பணியை சிறந்த முறையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது ஜாகீர் உசைன், தனிவட்டாட்சியர் (தேர்தல்கள்) வரதராஜன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story