வேலூர் மாவட்டத்தில்,சீன பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேச்சு
வேலூர் மாவட்டத்தில் சீன பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது எனப் பட்டாசுகள் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசினார்.
வேலூர்,
வேலூரில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பட்டாசுகள் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பட்டாசுகள் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்களுடைய கோரிக்கைகள், குறைகள் குறித்து கலெக்டர் ராமன் கேட்டறிந்தார். அப்போது கலெக்டர் பேசியதாவது:-
தீபாவளி பண்டிகையை யொட்டி பட்டாசுகள் விற்பனை செய்யும் கடைகளில் பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உரிய இடத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே பட்டாசுகள் இருப்பு வைக்க வேண்டும். பட்டாசு வைத்திருக்கும் கடைக்கு தனி நுழைவு வாயில் மற்றும் அவசர வழி வைத்திருக்க வேண்டும். பட்டாசுக்கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர் அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மேலும் கடைகளை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசால் அனுமதிக்கப்பட்ட மற்றும் உரிய அனுமதி பெற்று விற்பனை செய்யப்படும் முகவரிடம் இருந்து மட்டுமே பட்டாசுகள் வாங்க வேண்டும். தமிழகத்தில் சீன பட்டாசுகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் சீன பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது.
125 டெசிபல் அளவிற்கு மேல் சத்தம் எழுப்பக்கூடிய பட்டாசு வகைகளை விற்பனை செய்யக்கூடாது. பட்டாசு வகைகள் தவிர வேறு வகையான வெடிப்பொருட்களோ, துப்பாக்கி மருந்துகளோ, வெடிப்பொருள் கலவைகளோ வைத்திருக்கக் கூடாது. மின்சாரம் இல்லாத நேரத்தில் மெழுகுவர்த்தி, பெட்டர் மாஸ் விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்த கூடாது. மணல் வாளிகள், தண்ணீர் வாளிகள் மற்றும் தீத்தடுப்பு சாதனங்களை ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பட்டாசுக்கடைகளில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட தீயணைப்புத்துறை கட்டுப்பாட்டு மையம் 101 என்ற எண்ணிற்கு முதலில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் 94450-86112 என்ற ‘வாட்ஸ்- அப்’ எண் மூலமாகவும் தகவல்களை தீயணைப்புத் துறையினருக்கு தெரிவிக்கலாம்.
அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனை செய்தாலோ, சீன பட்டாசுகள் விற்பனை செய்தாலோ போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும் 90927-00100 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணிற்கு தகவல்கள் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில்லாத தீபாவளியை கொண்டாட பட்டாசுக்கடை உரிமையாளர்கள் அரசு தெரிவிக்கும் விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதில், உதவி கலெக்டர்கள் மேகராஜ், பிரியங்கா, இளம்பகவத், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடாசலம், வேலூர் துணை இயக்குனரக வெடிப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலர் கணேஷ், பட்டாசுக்கடை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தீயணைப்புத் துறையினர் பட்டாசுக்கடைகளில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்க ஒத்திகையை பட்டாசுக்கடை உரிமையாளர்களுக்குச் செய்து காண்பித்தனர்.

Related Tags :
Next Story