ஹலேமக்கி கிராமத்தில் பாம்பிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்


ஹலேமக்கி கிராமத்தில் பாம்பிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்
x
தினத்தந்தி 24 Oct 2018 4:10 AM IST (Updated: 24 Oct 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஹலேமக்கி கிராமத்தை சேர்ந்தவர் அவினாசி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான காபித்தோட்டத்திற்கு சென்றார்.

சிக்கமகளூரு,

அப்போது அவர் தான் வளர்த்து வரும் நாயையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார். தோட்டத்திற்கு சென்ற பின்னர், அவினாசி வேலைகளை செய்து கொண்டிருந்தார். நாய் மட்டும் தனியாக நின்று கொண்டு அங்குள்ள ஒரு புதரை பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த அவினாசி, நாய் ஏன் குரைக்கின்றது என புதரில் சென்று பார்த்தார். அப்போது அங்கு ஒரு நாகப்பாம்பு இருந்தது. அது உடனடியாக புதரில் இருந்து வெளியேறி அவினாசியை நோக்கி வந்து கடிக்க முயன்றது. தனது எஜமானரை, பாம்பு கடிக்க முயற்சிப்பதை அறிந்த நாய், பாம்பின் முன்பு ஓடிவந்து நின்றது. பின்னர் அது, அந்த பாம்பை கடித்து குதற சீறிப்பாய்ந்தது.

அப்போது அந்த பாம்பு, நாயிடம் இருந்து தப்பி மீண்டும் புதருக்குள் ஓடி ஒழிந்து கொண்டது. இந்த காட்சிகளை அவினாசி தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தன்னை காப்பாற்றிய தனது செல்லப்பிராணியான நாய் குறித்து அவினாசி அப்பகுதி மக்களிடம் பெருமையாக கூறி வருகிறார்.

Next Story