சேலம் சரகத்தில் வாகன தணிக்கை: 214 ஆம்னி பஸ்களுக்கு ரூ.5¾ லட்சம் அபராதம்


சேலம் சரகத்தில் வாகன தணிக்கை: 214 ஆம்னி பஸ்களுக்கு ரூ.5¾ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 24 Oct 2018 4:14 AM IST (Updated: 24 Oct 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சரகத்தில் வாகன தணிக்கையின் போது 214 ஆம்னி பஸ்களுக்கு ரூ.5 லட்சத்து 81 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்,

சேலம் சரகத்திற்கு உட்பட்ட தொப்பூர், மேட்டுப்பட்டி ஆகிய சுங்கச்சாவடிகளில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் அலுவலர்கள் பலர் கூட்டாக இணைந்து கடந்த 17-ந்தேதி முதல் நேற்று வரை சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர். இதில் அந்த வழியாக வந்த பஸ், லாரி, கார், ஆம்னி பஸ்கள் என 1,300-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சோதனை நடத்தினர்.

இதில் காற்று ஒலிப்பான் பயன்படுத்தியது, சாலை வரி செலுத்தாமல் வாகனம் இயக்கியது, முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 214 ஆம்னி பஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் அவற்றுக்கு ரூ.5 லட்சத்து 81 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டு விதிமுறை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்ககோரி அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 17-ந்தேதி முதல் நேற்று வரை இரவு-பகலாக சேலம் சரகத்தில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

இதில் விதிமுறை மீறி இயக்கிய 214 ஆம்னி பஸ்கள் கண்டு பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு வாகன உரிமையாளர்களிடம் இருந்து வரியாக ரூ.44 ஆயிரம் வசூலிக்கப்பட்டது என்று கூறினர்.


Next Story