மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு


மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2018 4:36 AM IST (Updated: 24 Oct 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

சேலையூரில் மகள், மருமகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 15 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள மப்பேடு இரட்டைமலை சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 51). இவரது மகள் சசிரேகா. மருமகன் சுரேஷ். இவர்கள் 3 பேரும் குரோம்பேட்டையில் உள்ள துணிக்கடைக்கு நேற்று முன்தினம் இரவு துணி எடுக்க சென்றனர்.

பின்னர், இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் குரோம்பேட்டையில் இருந்து மப்பேட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சுரேஷ் ஓட்டினார். பின்னால் சசிரேகாவும், மகாலட்சுமியும் உட்கார்ந்து இருந்தனர்.

சங்கிலி பறிப்பு

சேலையூர் திருவஞ்சேரி அகரம் மெயின் ரோட்டில் வந்தபோது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்க தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மகாலட்சுமி காயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story