“தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை” கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி


“தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை” கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
x
தினத்தந்தி 25 Oct 2018 3:45 AM IST (Updated: 25 Oct 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

எனவே டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரையிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறும்.

பின்னர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறவர்கள் மீதும், அவற்றை விற்பனை செய்கிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் யாருக்கும் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை. இந்த மாதத்தில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. அவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு வந்தவர்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

டெங்கு தடுப்பு பணியில் மாவட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியாளர்களும், தூத்துக்குடி மாநகராட்சியில் 450 பணியாளர்களும் ஈடுபட்டு உள்ளனர்.

உயர் அதிகாரிகளும் வீடு வீடாக சென்று, டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில், தடுப்பு மருந்துகளை பஸ் நிலையம், பஸ் நிறுத்தம் மற்றும் பஸ்களில் தெளித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story