சுய உதவி குழுக்களுக்கு ரூ.165 கோடி கடன்; அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்


சுய உதவி குழுக்களுக்கு ரூ.165 கோடி கடன்; அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்
x
தினத்தந்தி 25 Oct 2018 4:15 AM IST (Updated: 25 Oct 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

சுய உதவி குழுக்களுக்கு ரூ.165 கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர்,

காரியாபட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்தது. ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார்.

119 பேருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள், 37 சுயஉதவிகுழுக்களுக்கு நேரடி கடன் உதவித்தொகை, 78 சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி, 1 சுய உதவிகுழுவுக்கு கூட்டமைப்பு பெருங்கடன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 6 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் என 241 பேருக்கு ரூ.1 கோடியே 53 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதனை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:–

மாவட்டத்தில் இதுவரை 2,527 அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. மானியம் ரூ.6 கோடியே 32 லட்சம் விடுவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் முதல் மாவட்டமாக திகழ்கிறது. சிறு விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால்பண்ணை, சிற்றுண்டிச்சாலை, பெட்டிக்கடை, கால்நடை தீவனக்கடை, தையல்கடை, பழக்கடை, காய்கறிக்கடை, ஜெராக்ஸ் கடை, தேநீர் நிலையம், பலகாரக்கடை போன்ற வருமானம் தரக்கூடிய பல்வேறு தொழில்கள் செய்ய மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்க முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் பல்வேறு தொழில்கள் புரிந்து அவர்களுடைய குடும்ப பொருளாதார நிலையை உயர்த்தவதற்கு நடப்பாண்டில் ரூ.165 கோடி வங்கி கடனாக வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்குவதோடு அவர்கள் எவ்வாறு சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர்களை வைத்து கலெக்டர் பயிற்சி கொடுத்து இருக்கிறார். இது போன்ற பயிற்சி வகுப்பு வேறு எந்த மாவட்டத்திலும் வழங்கப்படவில்லை. இவ்வாறு கூறினார்.


Next Story