முதல் போக பாசனத்துக்காக பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மலர் தூவி வரவேற்பு


முதல் போக பாசனத்துக்காக பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மலர் தூவி வரவேற்பு
x
தினத்தந்தி 25 Oct 2018 3:30 AM IST (Updated: 25 Oct 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

முதல் போக பாசனத்துக்காக பழனி பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்து நேற்று முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றார்.

பழனி, 

பழனியை அடுத்த பால சமுத்திரம் பகுதியில் பாலாறு- பொருந்தலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 65 அடி ஆகும். அணையில் தற்போது 47.54 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினா டிக்கு 111 கன அடி நீர்வரத்து உள்ளது. இந்த நிலையில் முதல் போக பாச னத்துக்காக தண்ணீர் திறந்து விட வேண் டும் என விவசாயி கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து அணையில் இருந்து முதல் போக பாசனத் துக்காக தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி நேற்று பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்து, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது, மாவட்ட கலெக் டர் டி.ஜி.வினய், பழனி சப்- கலெக்டர் அருண்ராஜ், உதய குமார் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணு கோபாலு, சுப்புரத்தினம், ஏ.டி.செல்லச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டு மலர் தூவினர். இதையடுத்து வனத் துறை அமைச்சர் பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்காக இன்று (அதாவது நேற்று) முதல் வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படு கிறது. நீர்வரத்து, தண்ணீர் இருப்பு ஆகியவற்றை பொறுத்து 130 நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் பழனி நகர், புறநகர் பகுதிகள் மற்றும் புதச்சு கிரா மத்தில் உள்ள 844 ஏக்கர் நிலங் கள் பாசன வசதி பெறும்.

மேலும் அணையை நம்பி உள்ள 20 குளங்கள், 7 பாசன கால்வாய்கள் நிரம்பும் வகை யில் அணையின் நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும். பழனி நகரை விரிவுபடுத்தும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் பழனி நகரை சுற்றி யுள்ள கிராமங்கள் இணைக் கப்பட்டு நகரின் எல்லைப்பகுதி விரிவுபடுத்தப்படும். கொடைக்கானல் வனச் சரணாலயத்துக்கு தேவை யான நிதி ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், பழனி நகர அ.தி.மு.க. செயலாளர் முரு கானந்தம், ஒன்றிய செயலாளர் முத்துசாமி, நெய்க்காரப்பட்டி பேரூர் கழக செயலாளர் விஜய சேகர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story