மாநிலங்களுக்கு மானியம் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது - நாராயணசாமி புகார்


மாநிலங்களுக்கு மானியம் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது - நாராயணசாமி புகார்
x
தினத்தந்தி 25 Oct 2018 5:15 AM IST (Updated: 25 Oct 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

மாநில அரசுகளுக்கு மானியம் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம், எஸ் வங்கியும் இணைந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பணமில்லா பரிவர்த்தனை திட்டம் (ரூபே கார்டு) அறிமுகம் விழா நடந்து.

நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் நடைபெற்ற விழாவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார். சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் பாலன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு ரூபே திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

நம் நாட்டில் 20 சதவீதம் மக்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். அனைவரும் ஏதேனும் ஒரு வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பணமில்லா பரிவர்த்தனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா கழகத்துக்கு எந்த செலவும் கிடையாது. அதேபோல் சுற்றுலா பயணிகளிடமும் கமி‌ஷனும் வசூலிக்கப்படமாட்டாது.

புதுச்சேரி மாநிலத்தை பொலிவுறும் நகராக மாற்றும் திட்டத்தை வகுத்து நிறைவேற்றி வருகிறோம். அதன்பிறகு மேலும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருவார்கள். இதன் மூலம் வியாபாரம் பெருகும், வேலைவாய்ப்புகள் உருவாகும்.

நமது மாநிலத்தின் கனிமவளம் எதுவுமில்லை. எனவே நமக்கு வியாபாரம், கலால் மூலமாக தான் வருவாய் கிடைக்கிறது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்குவதில் வித்தியாசம் காட்டுகிறது. பாரபட்சமின்றி மானியம் வழங்கு வேண்டும் என்பது குறித்து பிரதமரிடமும், மத்திய நிதி மந்திரியிடமும் பலமுறை சுட்டிக்காட்டி உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story