ஐப்பசி பவுர்ணமியையொட்டி மலைக்கோட்டை, திருவானைக்காவல் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி மலைக்கோட்டை, திருவானைக்காவல் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மலைக்கோட்டை,
உயிர்களை இயக்கும் சக்தி படைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம். அத்தனை சிவன் கோவில்களிலும் ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்பட்டுள்ளது. அன்னமும் லிங்க வடிவில் உள்ளது. ஐப்பசியில் வரும் பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் 16 கலைகளுடன் பூரண சோபையுடன் பிரகாசிக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை வரும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று சிவாலயங்களில் சாயரட்சையின்போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிக்கு நேற்று ஐப்பசி பவுர்ணமியையொட்டி சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடு நடந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை தொடங்கி நடந்தது. பின்னர் தாயுமானவர் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் நூற்றுக்கால் மண்டபத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீபாராதனை நடத்தப்பட்டது.
மாலை 4.30 மணிக்கு மேல் கோவில் நிர்வாகம் சார்பில் மகா அன்னாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. 100 கிலோ அரிசியில் சாதம் வடிக்கப்பட்டு அவை மூலவர் தாயுமானவர் சுவாமி உடல் முழுக்க அபிஷேகமாக செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரமாக அபிஷேக காட்சியில் தாயுமானவர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் அன்னாபிஷேக காட்சியை கண்டு வழிபட்டனர். மேலும் பூ, பழங்கள் வைத்தும் வழிபாடு நடந்தது.
தாயுமானவர் சிரஸ்தத்தில்(உடல் பாகம்) சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே, அதனை எவரும் உண்ணாமல் இரவு 7.30 மணிக்கு மேல் அப்படியே எடுத்து சென்று காவிரி ஆற்றில் நீர்வாழ் உயிரினமான மீன் மற்றும் புழு, பூச்சிகளுக்கு உணவாக நீரில் கரைத்து விடப்பட்டது. பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னத்துடன் தயிர் சேர்த்து தயிர்சாதம்போல பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் நோய் நொடிகள் வராது. குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் ஐதீகம் ஆகும். மேலும் பஞ்சபூதங்களை வழிபட்ட புண்ணியமும் கிட்டும் என்பதாகும். மகா அன்னாபிஷேக நிகழ்ச்சியை கோவில் உதவி ஆணையர் விஜயராணி, குருக்கள் குமார் மற்றும் பணியாளர்கள் முன்னின்று நடத்தினர்.
இதுபோல திருச்சி நந்தி கோவில் தெருவில் உள்ள நாகநாதர் கோவிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலின் தெற்கு மூலையில் உள்ள குபேர லிங்கத்திற்கு நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. வடிக்கப்பட்ட சாதத்தை லிங்கத்தில் சாத்தி அலங்காரம் செய்து இருந்தனர். இதனையொட்டி நடைபெற்ற தீபாராதனையின்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோவிலில் நேற்று மாலை 5 மணி அளவில் 75 கிலோ சாதம் வடித்து மூலவருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனையொட்டி நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சாம்பார் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதே போன்று முசிறியில் சந்திரமவுலீஸ்வரருக்கும் அன்னாபிஷேகம் நடந்தது.

Related Tags :
Next Story