சிகிச்சைக்கு வந்த சிறுமி மானபங்கம் வார்டு பாய்க்கு 5 ஆண்டு ஜெயில்
சிகிச்சைக்கு வந்த சிறுமியை மானபங்கம் செய்த வார்டு பாய்க்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மும்பை விக்ரோலி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வார்டு பாயாக வேலை பார்த்து வந்தவர் அஜிங்கே (வயது 25). இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 வயது சிறுமி ஒருத்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள்.
இதில் சம்பவத்தன்று சிறுமி தூங்கி கொண்டு இருந்த போது வார்டுபாய் அஜிங்கே அவளின் ஆடைகளை கழற்றி மானபங்கம் செய்து உள்ளார்.
வார்டு பாய்க்கு ஜெயில்
இதுகுறித்து சிறுமி தாயிடம் கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து விக்ரோலி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வார்டு பாய் அஜிங்கேவை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.
இதில் வழக்கை விசாரித்த கோர்ட்டு, சிகிச்சைக்கு வந்த சிறுமியை மானபங்கம் செய்த வார்டு பாய்க்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.
Related Tags :
Next Story