மது குடிக்க பணம் கேட்டு தகராறு: தொழிலாளிக்கு கத்திக்குத்து நண்பர் கைது
போளூரில் மது குடிக்க பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய நண்பர் கைது செய்யப்பட்டார்.
போளூர் சாவடி தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் மணிகண்டன் (வயது 39), கட்டிட மேஸ்திரி. போளூர் மாயன் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் சேட்டு (35), தொழிலாளி. மணிகண்டனும், சேட்டுவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் தினமும் மாலையில் சாவடி தெருவில் ஒன்று கூடி மது அருந்துவது வழக்கம்.
கடந்த 23-ந் தேதி மாலை குடிக்க பணம் கொடு என்று சேட்டுவிடம் மணிகண்டன் கேட்டுள்ளார். அப்போது பணம் இல்லை என்று சேட்டு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், சேட்டுவிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது மணிகண்டன் தன்னிடம் இருந்த கத்தியால் சேட்டுவின் கழுத்தில் குத்தி உள்ளார். இதில் நரம்பு துண்டிக்கப்பட்டு ரத்தம் வெளியேறியது. இதையடுத்து மணிகண்டன் தப்பியோடி விட்டார்.
உடனடியாக அங்கிருந்தவர் கள் சேட்டுவை மீட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சேட்டு கொடுத்த புகாரின் பேரில் போளூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் விநாயகம் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.
இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story