பெண்ணை கொன்ற தொழிலாளி 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது


பெண்ணை கொன்ற தொழிலாளி 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது
x
தினத்தந்தி 26 Oct 2018 4:15 AM IST (Updated: 26 Oct 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கொன்ற தொழிலாளி 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

பேரூர்,

கோவை தொண்டாமுத்தூர் முத்திபாளையத்தை சேர்ந்த என்.கே.சந்திரன் என்பவரது வீட்டில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்பாஸ் (வயது 45) என்பவர் தனது மனைவி அலிமா பேகம் (30), மகன் சுதன் (5) ஆகியோருடன் தங்கி வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று சிறுவன் சுதன், அவர்களுடன் தங்கி வேலை செய்து வந்த நூருல் அமீன் என்பவரது வீட்டுக்கு விளையாட சென்றான். ஆனால் நூருல் அமீன், சிறுவன் பணம் திருட வந்து உள்ளான் என எண்ணி சிறுவனின் தாய் அலிமா பேகத்துடன் தகராறில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் தகராறு முற்றியது.

இதில் ஆவேசமடைந்த நூருல் அமீன் கட்டையால் அலிமா பேகத்தை தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அலிமா பேகத்தை பக்கத்து வீட்டுக்காரர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அலிமாபேகம் இறந்தார். உடனே நூருல் அமீன் (35) தப்பி வெளி மாநிலத்திற்கு ஓடி விட்டார். இந்த கொலை கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி நடந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொண்டாமுத்தூர் போலீசார் நூருல் அமீனை பல இடங்களில் தேடினர்.அவர் சிக்கவில்லை.இதை தொடர்ந்து சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் ஷாஜகான், ரஞ்ஜித்குமார் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர் அசாம் சென்றனர்.அங்கு நோகம் மாவட்டத்தில் உள்ள ரூப்பேக்கிங் தாலுகாவுக்குட்பட்ட பில்பார்க் என்ற ஊரில் வைத்து அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நூருல்அமீனை தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Tags :
Next Story