திருவாரூர் அரசு மருத்துவமனை மாடியில் இருந்து கீழே விழுந்த நோயாளி சாவு போலீசார் விசாரணை


திருவாரூர் அரசு மருத்துவமனை மாடியில் இருந்து கீழே விழுந்த நோயாளி சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 Oct 2018 4:30 AM IST (Updated: 26 Oct 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாடியில் இருந்து கீழே விழுந்த நோயாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்,

நாகை மாவட்டம் சேத்தி வடகுடியை சேர்்ந்தவர்் சின்னையன் (வயது 45). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் தனது இருகைகளிலும் அடிபட்ட நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்். இவருக்கு உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டதால் கடந்த 23-ந்தேதி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் 2-வது மாடியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

சின்னையனுக்கு துணையாக அவரது மனைவி லட்சுமியும் உடன் இருந்தார்். இந்தநிலையில் நேற்று அதிகாலை சின்னையன் தான் தங்கியிருந்த 2-வது மாடியில் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடத்திற்கு உள்பகுதியில் கீழே விழுந்து உயிரிழந்தார்். இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர்் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்னையனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், சின்னையன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து வெளியில் செல்லும் நோக்கத்துடன் ஜன்னல் வழியாக கீழே இறங்க முயன்றுள்ளார். அப்போது அங்கு இருந்த சிமெண்டு பைப்பில் கால் வைத்த போது, அந்த பைப் திடீரென உடைந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காய மடைந்த சின்னையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

Next Story