விபத்தில் பலியான ஓட்டல் அதிபர் குடும்பத்துக்கு ரூ.29 லட்சம் நஷ்டஈடு; விருதுநகர் கோர்ட்டு உத்தரவு


விபத்தில் பலியான ஓட்டல் அதிபர் குடும்பத்துக்கு ரூ.29 லட்சம் நஷ்டஈடு; விருதுநகர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 Oct 2018 3:15 AM IST (Updated: 26 Oct 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே விபத்தில் பலியான ஓட்டல் அதிபர் குடும்பத்துக்கு ரூ.29 லட்சம் நஷ்டஈடு வழங்க விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டது.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள கருப்பம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் அரியானா மாநிலத்தில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த 12.9.2017 அன்று சொந்த ஊருக்கு வந்திருந்த செல்வராஜ், விருதுநகர் பை–பாஸ் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது மனைவி பாண்டியம்மாள் மற்றும் குடும்பத்தினர் நஷ்ட ஈடு கோரி விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி பரிமளா விபத்தில் பலியான ஓட்டல் அதிபர் செல்வராஜின் குடும்பத்தினருக்கு விருதுநகரில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.29 லட்சத்து 17 ஆயிரத்து 500 நஷ்ட ஈட்டை 7½ சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார்.


Next Story