தாயார், பாட்டியுடன் சென்ற போது ஆட்டோவில் இருந்து விழுந்து 4 வயது சிறுமி சாவு


தாயார், பாட்டியுடன் சென்ற போது ஆட்டோவில் இருந்து விழுந்து 4 வயது சிறுமி சாவு
x
தினத்தந்தி 26 Oct 2018 3:45 AM IST (Updated: 26 Oct 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

தாயார் மற்றும் பாட்டியுடன் சென்றபோது ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்து போனாள்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது33). இவரது மனைவி சங்கரேஸ்வரி (29). இவர்களது மகள் சிவஹரினி (4).

சிவஹரினியின் பாட்டி இசக்கியம்மாளுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சங்கரேஸ்வரி, இசக்கியம்மாளை அழைத்துச்சென்றுள்ளார். அவர்களுடன் சிறுமி சிவஹரினியும் வந்தாள் சுந்தரபாண்டியம் விலக்குக்கு மூவரும் வந்துள்ளனர்.

அந்த வழியே ஒரு ஆட்டோ வந்துள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல மூவரும் ஏறியுள்ளார்கள். வத்திராயிருப்பு கிருஷ்ணன்கோவில் சாலையில் பட்டியக்கல் விலக்கு அருகே ஆட்டோ வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ஆட்டோ டிரைவரின் பின்புறம் உள்ள மரப் பலகையில் உட்கார்ந்து வந்த சிவஹரினி, ஆட்டோவிலிருந்து கீழே விழுந்துள்ளாள். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிவஹரினியை கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து சிறுமியின் உயிர் ஏற்கனவே பிரித்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story