சட்டக்கல்லூரி மாணவியை ஆஜர்படுத்தக்கோரிய வழக்கு: முன்னாள் அமைச்சரின் மகனுக்கு சம்மன் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சட்டக்கல்லூரி மாணவியை ஆஜர்படுத்தக்கோரிய வழக்கு: முன்னாள் அமைச்சரின் மகனுக்கு சம்மன் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 Oct 2018 3:30 AM IST (Updated: 26 Oct 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

சட்டக்கல்லூரி மாணவியை ஆஜர்படுத்தக்கோரிய வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகன் ஆஜராக சம்மன் அனுப்புமாறு போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

சென்னை வேளச்சேரியை சேர்ந்த விஜய் ராஜேஷ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது:–

எனக்கு திருமணமாகி யாழினி (வயது 30) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். எனது மனைவி யாழினி சென்னை சட்டக்கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ரத்தீஸ் என்பவரும் படித்து வந்தார். அவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் எனது மனைவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. திடீரென அவர் குழந்தைகளுடன் தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்று, அவருடைய பெற்றோருடன் வசித்தார்.

இதற்கிடையே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபாலின் மகன் ரத்தீஸ், எனது மனைவியிடம் தவறான கருத்துகளை கூறி அவரது மனதை மாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ரத்தீசும், அவரது நண்பர் சுனில் என்பவருடன் சேர்ந்து எனது மனைவியை கடத்தி கொடுமைப்படுத்தி வருகின்றனர். எனது மனைவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த மாதம் 25–ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, யாழினி கோர்ட்டில் ஆஜரானார்.

அடுத்த கட்ட விசாரணையின்போது அவரும், ரத்தீசும் ஆஜராகவில்லை.

இதையடுத்து அவர்களை கோர்ட்டில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப சம்பந்தப்பட்ட போலீசாருக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 31–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story