சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2018 4:00 AM IST (Updated: 26 Oct 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நேற்று மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

க.பரமத்தி,

மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ரூ.9 ஆயிரம் அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். ஒரு நபருக்கான உணவு செலவீனத்தை ரூ.5 ஆக உயர்த்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நேற்று மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

அதன்படி கரூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கரூர் மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுந்தரம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் மலர்விழி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். காத்திருப்பு போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் உள்பட பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story