கலெக்டர் வராததை கண்டித்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
கலெக்டர் வராததை கண்டித்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் எனவும், அதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிக்கை விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்தனர்.அப்போது கூட்ட அரங்கில் விவசாயிகள் அமர்ந்திருந்தனர். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொள்ளவில்லை.
வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் சிலர் இருந்தனர். கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது திரளான விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் எங்களது குறைகளை தெரிவிக்க வந்தோம்.ஆனால் மாவட்ட கலெக்டர் இல்லாதபோது இந்த கூட்டத்தை நடத்தக்கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை ஏற்றுக்கொள்ளாத விவசாயிகள் கலெக்டர் பங்கேற்காத குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளியே வந்தனர்.அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் திவ்யஸ்ரீ மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து வருகிற வெள்ளிக்கிழமை கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story