காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பட்டாசு கடை வைத்தால் கடும் நடவடிக்கை


காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பட்டாசு கடை வைத்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Oct 2018 4:00 AM IST (Updated: 26 Oct 2018 10:57 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பட்டாசு கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி பட்டாசு கடை வைத்திருந்தாலோ, பட்டாசு தயாரித்தலோ, வீட்டில் வைத்து விற்பனை செய்தாலோ, நிதி சீட்டு நடத்தி அதன் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தாலோ சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு மேற்படி செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் வெடிபொருட்கள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள் 2008-ன் படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பட்டாசு கடை நடத்த உரிமம் பெற்றுள்ள வியாபாரிகள் கடையில் உரிமத்தின் நகலை பொதுமக்கள் அறியும் வகையில் காட்சிப் படுத்திட வேண்டும். விதிகளுக்குட்பட்டு அமைத்து தீ தடுப்பு சாதனங்களுடன் கடை அமைக்கப்பட வேண்டும்.

அனுமதியில்லாமல் பட்டாசு விற்பவர்களிடம் இருந்து பொதுமக்கள் பட்டாசு வாங்க வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்படு கிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story