பெருந்துறை, அந்தியூரில் போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


பெருந்துறை, அந்தியூரில் போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2018 3:45 AM IST (Updated: 26 Oct 2018 11:00 PM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையில் உள்ள அரசு போக்குவரத்து கிளை வளாகத்தில் ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

ஈரோடு,

பெருந்துறையில் உள்ள அரசு போக்குவரத்து கிளை வளாகத்தில், ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு மாவட்ட துணைத்தலைவர் நேசக்குமார் தலைமை தாங்கினார்.

 ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குரிய பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 4–ந்தேதி சென்னை தலைமை அலுவலகத்தை நோக்கி சென்ற போக்குவரத்து ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர். இதில் கலந்துகொண்ட ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது, மாநகராட்சி பகுதிகளில் பணிபுரியும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாநகர் வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் போக்கவரத்து ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் அந்தியூர் போக்குவரத்து கழக பணிமனை அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்துக்கு மண்டல மத்திய சங்க பொருளாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். இதில் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story