தீபாவளி போனஸ் வழங்கக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது


தீபாவளி போனஸ் வழங்கக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 27 Oct 2018 3:45 AM IST (Updated: 27 Oct 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி திருவாரூரில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 
நெல் கொள்முதல் தடையின்றி செய்ய தேவையான சாக்குகள் வாங்க வேண்டும். தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன், மாநில இணை பொதுச்செயலாளர் குணசேகரன், தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சுப்பிரமணியன், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story