நிலுவை தொகை வழங்காததை கண்டித்து 1-ந்தேதி முதல் விவசாயிகள் தொடர் போராட்டம்
கரும்பிற்கான நிலுவை தொகை வழங்காததை கண்டித்து வருகிற 1-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் அறிவித்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் இளைஞரணி செயலாளர் நீலகண்டன் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்கை சீற்றங்களை கண்டறியும் கருவிகளை பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும். உரங்களின் விலையை குறைக்க வேண்டும். ஏரி, குளங்களில் குடிமராமத்து பணிகளை முறையாக நடத்த வேண்டும் என்றார்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் கரும்பு விவசாயிகள் சார்பில் பேசுகையில், போதிய மழையின்றி பயிர்கள் கருகி வருவதால் பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று கடந்த முறை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தோம். கருகிய பயிர்களை கணக்கெடுத்து, அதன் புள்ளி விவரத்தை கேட்டிருந்தோம். ஆனால் அந்த புள்ளி விவரம் அளிக்கப்படவில்லை.
பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு உள்ளது. அதனை சரிப்படுத்த வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக மின் இணைப்பு கோரி பதிவேட்டில் பதிந்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு எறையூர் அரசு சர்க்கரை ஆலை நிலுவை தொகை வழங்காததை கண்டித்து வருகிற 1-ந்தேதி முதல் அந்த சர்க்கரை ஆலை முன்போ அல்லது கலெக்டர் அலுவலகத்தின் முன்போ தொடர் போராட்டத்தில் ஈடுபட கரும்பு விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக, அதனை கலெக்டரிடம் தெரிவித்தார்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாணிக்கம் பேசுகையில், அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனஸ் வழங்குகிறார்கள். அது போல விவசாயிகளுக்கு தீபாவளி போனஸ் கொடுக்க வேண்டும் என்று அரசிடம் கேட்கவில்லை. கரும்பிற்கான நிலுவை தொகையை தீபாவளிக்கு முன்பு வழங்கினால், அதுவே தீபாவளி போனஸ் தான் எங்களுக்கு என்றார்.
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட முதல்நிலை அதிகாரிகள் வர வேண்டும். மத்திய அரசு அறிவித்த பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை இடைத்தரகர்கள் விவசாயிகளுக்கு கிடைக்க பெறாமல் தடுக்கின்றனர். அதற்காக மாவட்ட நிர்வாகம் வேளாண்மை கமிட்டி அமைத்து விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த குறைபட்ச ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் நாசப்படுத்தி வருகின்றன. அதனை சுட்டு கொல்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் பலர் கோரிக்கை விடுத்தனர்.

Related Tags :
Next Story