போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2018 3:30 AM IST (Updated: 27 Oct 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமங்கலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலம்,

திருமங்கலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு டிரைவர், கண்டக்டர் உள்பட போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, கல்வி முன்பணம் வழங்க வேண்டும், தீபாவளி முன் பணம், பணி ஓய்வு பலன் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தில் சி.ஐ.டி.யு, எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story