அரசு மேல்நிலைப் பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


அரசு மேல்நிலைப் பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 Oct 2018 3:30 AM IST (Updated: 27 Oct 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கட்டுமாவடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சமீபத்தில் மழை பெய்ததையடுத்து இந்த பள்ளி வளாகத்தை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து பள்ளி வளாகம் முழுவதும் தேங்கி நிற்கி றது. இதனால் இந்த தண்ணீரில் கொசு, விஷப்பூச்சிகள் உற்பத்தியாகிறது.

மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடும்போது தண்ணீரில் இருக்கும் விஷப்பூச்சிகள் மாணவர்களை கடித்து விடுகிறது. மேலும் டெங்கு, பன்றி காய்ச்சல் பரவிக்கொண்டிருப்பதால் மாணவ-மாணவிகளின் நலன்கருதி கட்டுமாவடி மேல்நிலை பள்ளி வளாகத்தில் தேங்கி இருக்கும் மழைநீரை வெளியேற்றி விட்டு பள்ளி வளாகத்தை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story