கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2018 3:30 AM IST (Updated: 27 Oct 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தேனி,

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பண்டிகை கால முன்பணத்தை உடனே வழங்க வேண்டும். அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. 

தேனி மாவட்டத்தில் பழனிசெட்டிபட்டி, பெரியகுளம், போடி, தேவாரம், கம்பம், லோயர்கேம்ப் ஆகிய இடங்களில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பழனிசெட்டிபட்டியில் நடந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மத்திய சங்க துணைச் செயலாளர் ராமநாதன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Next Story