குமாரபாளையத்தில் பட்டதாரி வாலிபர் அடித்துக்கொலை
ஓட்டலில் சாப்பிட சென்றபோது ஏற்பட்ட தகராறில் பட்டதாரி வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
குமாரபாளையம்,
குமாரபாளையத்தில் ஓட்டலில் சாப்பிட சென்றபோது ஏற்பட்ட தகராறில் பட்டதாரி வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா சின்னப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். விசைத்தறி அதிபர். இவருடைய மகன் வேலழகன் (வயது 27). பி.காம். பட்டதாரி.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வேலழகன் மற்றும் அவருடைய நண்பர்கள் விக்னேஸ்வரன், பிரசாந்த், விக்கி என்ற விக்னேஷ், விவேக் ஆகிய 5 பேரும் குமாரபாளையம் சேலம் மெயின்ரோட்டில் பங்களா பகுதி அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது அந்த ஓட்டலை மூடிக்கொண்டு இருந்தனர். வேலழகன் உள்பட 5 பேரும் அங்கு சென்று தோசை, புரோட்டா கேட்டனர். அதற்கு ஓட்டல் உரிமையாளர் லட்சுமணன் (60), அவருடைய மகன் செந்தமிழ்வேலன் (33) ஆகியோர், டிபன் முடிந்து விட்டது, விளக்கை அணைத்து விட்டு ஓட்டலை மூடிக்கொண்டு இருக்கிறோம், என்றனர்.
இதற்கிடையே பார்சல் சாப்பாட்டுக்கு ஒருவர் ஏற்கனவே ஆர்டர் கொடுத்து இருந்தார். அப்போது அவர் வந்து சாப்பாடு பார்சலை கேட்டார். ஏற்கனவே கட்டி வைக்கப்பட்டு இருந்த சாப்பாடு பார்சலை எடுத்து லட்சுமணன் கொடுத்தார். இதை பார்த்ததும் 5 பேரும், இப்போது வந்தவருக்கு சாப்பாடு கொடுக்கிறீர்கள், ஆனால் எங்களுக்கு சாப்பாடு இல்லை என்கிறீர்கள்? என கூறினர்.
இதையடுத்து அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றி வேலழகன் விறகு கட்டையை எடுத்து லட்சுமணனை தாக்க முயன்றார். அப்போது வேலழகனை லட்சுமணனும், செந்தமிழ்வேலனும் சேர்ந்து பிடித்தனர். பின்னர் விறகு கட்டையால் லட்சுமணன், வேலழகன் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த வேலழகன் கீழே விழுந்தார்.
இதைத்தொடர்ந்து வேலழகனை அவருடைய நண்பர்கள் மோட்டார்சைக்கிளில் ஏற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு வேலழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி லட்சுமணன், செந்தமிழ்வேலனை ஆகியோரை கைது செய்தனர்.
ஓட்டலில் சாப்பிட சென்றபோது ஏற்பட்ட தகராறில் பட்டதாரி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story