சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி விபத்து கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி ஒருவர் படுகாயம்


சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி விபத்து கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Oct 2018 4:30 AM IST (Updated: 27 Oct 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

மும்பை, 

சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கல்லூரி மாணவர்கள்

ராய்காட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தவர் பிரனீத் (வயது20). இவர் நவிமும்பையில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்தநிலையில், இவர் சம்பவத்தன்று இரவு தனது கல்லூரியில் படித்து வந்த நண்பர்களான ரிஷப் (21), அபிஜித் (20) ஆகியோருடன் காரில் மும்பைக்கு வந்தார். பின்னர் நண்பர்கள் 3 பேரும் இரவு முழுவதும் மும்பை கேட்வே ஆப்இந்தியா, மெரின்டிரைவ், கிர்காவ் கடற்கரை ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்தனர். இதையடுத்து அதிகாலை 4.30 மணியளவில் மாணவர்கள் நவிமும்பை திரும்பினர்.

2 பேர் பலி

இதில் செம்பூர் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது காரை ஓட்டிய பிரனீத் தூங்கியதாக தெரிகிறது. இதனால் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு கம்பிகள் மீது மோதியது. இதில் தடுப்பு கம்பி கார் கண்ணாடியை உடைத்து கொண்டு மாணவர்கள் உடலை கிழித்தது. இந்த விபத்தில் 3 மாணவர்களும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் 3 பேரையும் மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் பிரனீத் மற்றும் ரிஷப் ஆகியோர் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். அபிஜித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல மாணவர்கள் மது குடித்து இருந்தார்களா? என்பதை கண்டுபிடிக்க அவர்களது ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Next Story