‘பிடிவாரண்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்’ போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
பிடிவாரண்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை கவனித்து வரும் போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, நீதிமன்றம் சம்பந்தமான நடவடிக்கைகளில் விரைந்து செயல்படுவது குறித்தும், சாட்சிகளை பாதுகாப்பாக கொண்டு வந்து நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவது குறித்தும் போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக போலீசார் பணியாற்ற வேண்டும், பிடிவாரண்டு குற்றவாளிகளையும் உடனுக்குடன் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கர், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், மகேஷ், திருமால், இளங்கோவன், ராமநாதன், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story