நெல்லை அருகே அனுமதியின்றி இயங்கிய கல்குவாரி ராட்சத எந்திரம் - 7 டிப்பர் லாரிகள் பறிமுதல்


நெல்லை அருகே அனுமதியின்றி இயங்கிய கல்குவாரி ராட்சத எந்திரம் - 7 டிப்பர் லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Oct 2018 3:00 AM IST (Updated: 28 Oct 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே உரிய அனுமதியின்றி இயங்கிய கல்குவாரியில் ராட்சத எந்திரம், 7 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆலங்குளம், 

நெல்லை அருகே உரிய அனுமதியின்றி இயங்கிய கல்குவாரியில் ராட்சத எந்திரம், 7 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அனுமதியின்றி இயங்கிய கல்குவாரி

நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் அருகே உகந்தான்பட்டி கிராமத்துக்கு வடபுறம் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. அம்பையை சேர்ந்த ராமசுப்பிரமணிய ராஜா என்பவருடைய பெயரில் உள்ள இந்த கல்குவாரியை, தற்போது நெல்லை திருத்து பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் குத்தகை முறையில் நடத்தி வந்துள்ளார். மேலும் இந்த கல்குவாரிக்கான உரிமம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காலாவதியாகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் உரிய அனுமதியின்றி கல்குவாரி தொடர்ந்து இயங்கி வருவதாக, சீதபற்பநல்லூர் போலீசுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.

டிப்பர் லாரிகள் பறிமுதல்

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், அந்தோணி சவரிமுத்து மற்றும் போலீசார் உடனடியாக கல்குவாரி பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் கல்குவாரியில் நின்று கொண்டிருந்த டிரைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த 4 டிப்பர் லாரிகள், 2 ராட்சத எந்திரங்கள், கார், 3 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் நேற்று காலையில் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் போலீசார் சென்றனர்.

அங்கு நின்று கொண்டிருந்த 3 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story