மாவட்ட எல்லையில் டி.டி.வி. தினகரனுக்கு உற்சாக வரவேற்பு


மாவட்ட எல்லையில் டி.டி.வி. தினகரனுக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 28 Oct 2018 4:00 AM IST (Updated: 28 Oct 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் மருதுபாண்டியர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த டி.டி.வி. தினகரனுக்கு மாவட்ட எல்லையான பூவந்தியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மானாமதுரை,

காளையார்கோவில் மருதுபாண்டியர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு மாவட்ட எல்லையான பூவந்தியில் மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி ஏற்பாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பூவந்தி ஆறுமுகம் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரளாக நின்று வரவேற்பு அளித்தனர். இதில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்ட பின்பு, லாடனேந்தல் கிராமத்தை சேர்ந்த கட்சி நிர்வாகியின் 3 வயது குழந்தை வீரமாகாளி தினகரனுக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பூவந்தி ஆறுமுகத்திற்கு சொந்தமான இடத்தில் புதிதாக சுவர் எழுப்பி தினகரனின் பிரமாண்டமான சுவரோவியத்தை வரைந்திருந்தனர். அதை தினகரன் திறந்து வைத்தார். பின்னர் சாலையின் இருபுறமும் திரளாக நின்றிருந்த கட்சியினர் கொடுத்த வரவேற்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் காளையார் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் உமாமகேஸ்வரி, மானாமதுரை ஒன்றிய செயலாளர் சரவணன், பூவந்தி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன், ஒன்றிய துணை செயலாளர் குமரன், புளியங்குளம் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் அக்கிரிமுத்து, மானாமதுரை வக்கீல் பிரிவு செயலாளர் சுரேஷ்பாபு உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் தினகரன் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்திற்கு சென்றார். அங்குள்ள மருதுபாண்டியரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் அ.ம.மு.க. நிர்வாகிகள் தங்கத்தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் உமாதேவன், மாவட்ட பேரவை செயலாளர் தேர்போகி பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ், மாவட்ட பொருளாளர் சக்தி, காரைக்குடி நகர செயலாளர் சரவணன், காளையார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி, இளைஞர் அணி கோதண்டபாணி, ஒன்றிய பேரவை செயலாளர் சாமிநாதன், திருப்பதி, பிரதீப், கருப்பசாமி, ஞானபிரகாஷ்ராஜ், செந்தில்குமார், சகாயம், பாலமுருகன்.

மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் இறகு சேரி வக்கீல் முருகன், தேவகோட்டை நகர செயலாளர் கமலக்கண்ணன், தேவகோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் தெண்ணீர் வயல் கணேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்குடி சங்கர், கண்ணங்குடி ஒன்றிய செயலாளர் குருந்தூர் செல்வராஜ், இளையான்குடி சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் துருக்கி ரபீக்ராஜா, நகர செயலாளர் உஸ்மான்அலி, திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகானந்தம், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சிவராஜ், நகரச் செயலாளர் ரகீம், சிங்கம்புணரி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அருணகிரி பட்டினம் அகமுடையார் சங்கம் சார்பில் தேவகோட்டை சிவன் கோவிலில் இருந்து ஏராளமான வாகனங்களில் நகர செயலாளர் ராமநாதன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு சங்கரபதி நிர்மல் மனநலம் குன்றிய பள்ளி மாணவ–மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story