கொங்கணாபுரம் அருகே பஞ்சு ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ ரூ.25 லட்சம் சேதம்
கொங்கணாபுரம் அருகே பஞ்சு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பஞ்சும், லாரியும் சேதமானது.
எடப்பாடி,
ஈரோட்டை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சொந்தமான டாரஸ் லாரியில் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 46) என்பவர் டிரைவராக உள்ளார். இவர் டாரஸ் லாரியில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்க்கா மாவட்டத்தில் இருந்து பஞ்சுபேல் ஏற்றிக்கொண்டு கொங்கணாபுரத்தில் உள்ள தனியார் மில்லுக்கு ஓட்டி வந்துள்ளார்.
லாரியில் உள்ள பஞ்சுபேலை எடை போட கொங்கணாபுரம் - எடப்பாடி சாலையில் உள்ள எடைபோடும் நிலையத்திற்கு லாரியை ஓட்டிவந்த போது எதிர்பாராத விதமாக சாலையின் மேல் செல்லும் மின்கம்பியில் பட்டு திடீரென பஞ்சுபேலில் தீப்பிடித்தது.
இதை பார்த்த டிரைவர் உடனடியாக லாரியை யாரும் இல்லாத இடத்திற்கு ஓட்டி வந்துள்ளார். ஆனால் அதற்குள் மளமளவென்று தீப்பிடித்து லாரி முழுவதும் எரிய ஆரம்பித்தது. டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார்.
லாரி எரிவதை பார்த்தவர்கள் உடனடியாக எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருந்தாலும் இந்த தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பஞ்சுபேலும், ரூ.15 லட்சம் மதிப்புள்ள டாரஸ் லாரியும் முழுவதும் எரிந்து சேதம் ஆனது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story