நிதி பரிமாற்றம் எதிலும் கவர்னர் மாளிகை தலையிடவில்லை; முதல்-அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு கிரண்பெடி பதில்
நிதி பரிமாற்றம் எதிலும் கவர்னர் மாளிகை தலையிடவில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு கவர்னர் கிரண்பெடி பதில் அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை முதல்-அமைச்சருக்கும், கவர்னருக்கும் இடையே உள்ள மோதல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. முதல்-அமைச்சரின் கேள்விக்கு, பதிலளிக்கும் வகையில் கவர்னர் மாளிகையில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் நாராயணசாமி மக்களை திசை திருப்பும் வகையில் இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து கூறி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. அவரின் கருத்துக்கள் சமூகத்தின் பொறுப்பை உணர்ந்து இருக்க வேண்டும். அதிகாரத்தை மீறி கவர்னர் செயல்படுகின்றார் என்று கூறியுள்ள முதல்- அமைச்சர் தனக்கு எழுதிய மிக கடுமையான வார்த்தைகள் கொண்ட கடிதத்தை மக்களிடம் தெரிவித்தால் அவரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
மத்திய பா.ஜ.க அரசின் உத்தரவுபடிதான் புதுவை மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களை கவர்னர் தடுப்பதாக முதல்-அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். இது அரசியல் ரீதியான கருத்து தான். ஒவ்வொரு வாரமும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறேன். மக்கள் நலத்திட்டங்களை முடக்க நினைத்தால் இதுபோன்ற கூட்டங்கள், ஆய்வுகளை எப்படி நடத்த முடியும். இதுவரை நான் 202 ஆய்வு பயணத்தை நிறைவு செய்துள்ளேன். சமூக பங்களிப்பு நிதியின் மூலம் புதுவையில் 86 கி.மீ தூரத்துக்கு பாசன வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுத்துள்ளேன். இதன் மூலம் 84 ஏரிகளும், 600 குளங்களும் பயன்பெறும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, வாய்க்கால்களை தூர்வார போதிய நிதியை ஒதுக்காதது ஏன்? அரசிடம் நிதி இல்லாத நிலையில், சமூக பங்களிப்புடன் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் முட்டுக்கட்டை போடுவது ஏன்? புதுச்சேரி மண்ணின் மைந்தரான முதல்-அமைச்சருக்கு மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது தான் வேலையா?
வெகுவிரைவிலோ அல்லது எனது பதவிகாலம் முடிந்த பின்னரோ புதுவையில் இருந்து நான் வெளியேறி விடுவேன். வாய்க்கால்களை தூர்வாரிய ஒப்பந்ததாரர்களுக்கு மக்கள் நேரடியாக பணம் வழங்கியுள்ளனர். நிதி பரிமாற்றம் எதிலும் கவர்னர் மாளிகை தலையிடவில்லை. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முதல்-அமைச்சர் தோல்வி அடைந்ததுபோல் மற்றவர்களும் தோல்வி அடைய வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.
கவர்னர் கிரண்பெடி மீது பிரதமரிடம் பல புகார்கள் தெரிவித்தாலும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், புதுவை அரசின் பட்ஜெட் ரூ.7,830 கோடி. இதில் மத்திய அரசு 26 சதவீதமாக ரூ.1,460 கோடியை மானியமாக வழங்குகிறது என்றும் முதல்-அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். புதுவை அரசின் நிதித்துறை செயலாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் நான் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்தேன்.
இதில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் நிதித்துறை செயலாளரை முதல்-அமைச்சர் தொடர்பு கொள்ளலாம். நான் உண்மையாக சேவை ஆற்றவே புதுவைக்கு வந்துள்ளேன். புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும்? சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள லோக் ஆயுக்தா சட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என முதல்-அமைச்சரின் பதிலுக்காக புதுச்சேரி மக்கள் காத்திருக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story