உரிய ஆவணங்கள் இன்றி அரசு பஸ்சில் கொண்டு சென்ற ரூ.11 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை
அரசு பஸ்சில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.11 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு,
அரசு பஸ்சில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.11 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
பல்லாரி நாடாளுமன்ற தொகுதிக்கு வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பல்லாரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. இதன்காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அதுபோல் நேற்று முன்தினம் நள்ளிரவில் பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே அருகே மரியம்மனஹள்ளிசோதனைசாவடியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தினர். இந்த வேளையில், தாவணகெரேயில் இருந்து மராட்டிய மாநிலம் சேலாப்புரா நோக்கி சென்ற கே.எஸ்.ஆர்.டி.சி. அரசு பஸ் அங்கு வந்தது.
ரூ.11 லட்சம் பறிமுதல்
அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, பஸ்சில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.11 லட்சம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ரூ.11 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பணம் கொப்பல் மாவட்டம் கங்காவதியை சேர்ந்த ஜூடூரு ஹனுமேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து மரியம்மனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story