மெரினா கடலில் குளித்தபோது மாயமான கல்லூரி மாணவர்கள் 2 பேரின் உடல்கள் நீலாங்கரையில் கரை ஒதுங்கியது
மெரினா கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவர்கள் 2 பேரின் உடல்கள் நீலாங்கரையில் நேற்று கரைஒதுங்கியது. உடல் களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
ஆலந்தூர்,
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் பாபு (வயது19). அகரம் பகுதியை சேர்ந்த ஜெயசங்கர் என்பவரது மகன் பிரசாந்த்(18). தனியார் கல்லூரி மாணவர்களான பாபு, பிரசாந்த் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மெரினா கலங்கரை விளக்கு பகுதிபின்புறம் உள்ள கடலில் குளித்தனர்.
அப்போது வந்த ராட்சத அலையில் பாபு மற்றும் பிரசாந்த் ஆகியோர் சிக்கி கொண்டனர். அவர்கள் 2 பேரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் 2 பேரையும் தேடியும் கிடைக்கவில்லை.
நீலாங்கரையில் கரைஒதுங்கிய உடல்கள்
இந்த நிலையில் நேற்று நீலாங்கரை கடற்கரை பகுதியில் பாபு, பிரசாந்த் ஆகியோரது உடல்கள் கரை ஒதுங்கியிருப்பதாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story