தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி 8-ந்தேதி நடக்கிறது


தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி 8-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 28 Oct 2018 3:15 AM IST (Updated: 28 Oct 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி வருகிற 8-ந்தேதி நடக்கிறது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டி வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகளம், கைப்பந்து, டென்னிஸ் மற்றும் நீச்சல் போட்டிகள் நடைபெறவுள்ளது. தடகள பிரிவில் 100, 400, 800, 1500 மீட்டர் ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும், நீச்சல் பிரிவில் 50, 100, 200, 400 மீட்டர் ப்ரீ ஸ்டைல், 50 மீட்டர் பேக் ஸ்ட்்ரோக் 50 மீட்டர் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் 50 மீட்டர்,பட்டர்பிளை ஸ்ட்ரோக் உள்ளிட்ட பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறுகிறது.

இருபாலருக்கான கைபந்து மற்றும் டென்னிஸ் போட்டிகளும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் தஞ்சை மாவட்ட பள்ளிகளை சேர்ந்த 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் தங்கள் பள்ளியிலிருந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கான ஒப்புதல் சான்று பெற்று பங்கு பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Next Story