காங்கிரஸ் எம்.பி.யின் இ-மெயிலை ஊடுருவி பண வசூல் வெளிநாட்டை சேர்ந்த 3 பேர் கைது


காங்கிரஸ் எம்.பி.யின் இ-மெயிலை ஊடுருவி பண வசூல் வெளிநாட்டை சேர்ந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2018 5:05 AM IST (Updated: 28 Oct 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் எம்.பி.யின் இ-மெயிலை ஊடுருவி பணவசூலில் ஈடுபட்ட வெளிநாட்டுக்காரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை, 

காங்கிரஸ் எம்.பி.யின் இ-மெயிலை ஊடுருவி பணவசூலில் ஈடுபட்ட வெளிநாட்டுக்காரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் எம்.பி.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ஹூசைன் தல்வியின் இ-மெயிலை அண்மையில் மர்மஆசாமிகள் ஹேக் செய்தனர். இதுபற்றி அவரது அலுவலகம் சார்பில் மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் எம்.பி.யின் இ-மெயிலை ஊடுருவியது வெளிநாட்டை சேர்ந்த 3 பேர் கும்பல் என்பதும், அவர்கள் டெல்லியில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

குறுந்தகவல் அனுப்பி...

விசாரணையில், அவர்கள் கோட் டிவார் நாட்டை சேர்ந்த கோனேதே முகமது (வயது 31), அவுட்டாரா என்கோல்சந்த் (32) மற்றும் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஓக்பீபோ மைக்கேல் (31) என்பது தெரியவந்தது. இவர்கள் ஊடுருவிய இ-மெயிலில் இருந்து ஹூசைன் தல்வி போல் குறுந்தகவல் அனுப்பி உள்ளனர்.

அந்த குறுந்தகவலில் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக குறிப்பிட்டு உள்ளனர்.

இதனால் எம்.பி.தான் பணம் கேட்கிறார் என நினைத்து பலரும் அந்த கும்பல் தெரிவித்த வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி உள்ளனர்.

போலீஸ் காவல்

போலீசார் கைதானவர்களிடம் இருந்து ஒரு மடிக்கணினி, பென்டிரைவ், செல்போன்கள், ஏ.டி.எம். கார்டுகள், ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் மும்பை அழைத்து வரப்பட்ட அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு அவர்களை வருகிற 2-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

Next Story