ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும் விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும் விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 29 Oct 2018 4:30 AM IST (Updated: 28 Oct 2018 11:21 PM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து, அரசாணை வெளியிட வேண்டும் என்று கறம்பக்குடியில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மாநில செயலாளர் துரைமாணிக்கம், மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும். சென்ற ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். பணி முடிந்து பலமாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ள அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் ஆரோக்கியசாமி வரவேற்றார். முடிவில் சேசுராஜ் நன்றி கூறினார்.

Next Story