குடோனில் தீ விபத்து: ரூ.2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
க.பரமத்தி அருகே உள்ள முன்னூரை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 48). இவருக்கு சொந்தமான குடோன் அதே பகுதியில் உள்ளது. இந்த குடோனை ஈரோடு மாவட்டம் சாலைப்புதூரை சேர்ந்த தனசேகரன்(46) என்பவர் குத்தகைக்கு எடுத்து அதில் திருமணம், காதணி விழா உள்ளிட்ட விசேஷங்களுக்கு தேவையான அலங்கார பொருட்கள், நார்காலி, டேபில், தரை விரிப்புகள் உள்பட பல்வேறு பொருட்களை வைத்து அதனை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை இந்த குடோனில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கரூர், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story