3 நாட்களாக நடந்த சத்துணவு ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ்; இன்று மறியலில் ஈடுபடுவதாக அறிவிப்பு


3 நாட்களாக நடந்த சத்துணவு ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ்; இன்று மறியலில் ஈடுபடுவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Oct 2018 4:15 AM IST (Updated: 29 Oct 2018 12:09 AM IST)
t-max-icont-min-icon

3 நாட்களாக நடந்த சத்துணவு ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இன்று சாலை மறியலில் ஈடுபடுவதாக அவர்கள் அறிவித்து உள்ளனர்.

ஈரோடு,

சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். 1–1–2016 அன்று முதல் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் கடந்த 25–ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் பலர் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு தேவையான உணவுகளை அவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு வந்தனர்.

இந்த நிலையில் 3 நாட்களாக நடந்த சத்துணவு ஊழியர்களின் போராட்டம் நேற்று முன்தினம் இரவு முடிவுக்கு வந்தது. அவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில மைய முடிவின்படி எங்களது காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 29–ந் தேதி (இன்று) முதல் பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு உணவு வழங்காமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எனவே எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தினமும் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’’, என்றனர்.


Next Story