ஈரோட்டில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு சூரம்பட்டி பகுதியில் இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு,
இந்து முன்னணி சார்பில், ஈரோடு சூரம்பட்டி பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முரளி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பூசப்பன், மாவட்ட தலைவர் ஜெகதீசன், துணைத்தலைவர் கராத்தே சிவா, பாரதீய ஜனதாக கட்சி மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்து முன்னணி மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் பேசினார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இளம்பெண்கள் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும். அய்யப்ப கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று போராடியவர்களை தாக்கிய கேரள கம்யூனிஸ்டு அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேரள அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஈரோடு தெற்கு நகர் தலைவர் தமிழ்செல்வன், துணைத்தலைவர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.