உளுந்தூர்பேட்டை அருகே: இளம்பெண், தீக்குளித்து தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி விஜயா. இவர்களுடைய மகள் கலைச்செல்வி (வயது 18). சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது கலைச்செல்வி தன் மீது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததில் வலியால் அவர் அலறி துடித்தார்.
இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கலைச்செல்வி மீது எரிந்த தீயை அணைத்து, அவரை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விஜயா உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வி உடல்நலக்குறைவால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story