போனஸ் வழங்கக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


போனஸ் வழங்கக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2018 4:00 AM IST (Updated: 29 Oct 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யு உடுமலை தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

உடுமலை,

30 நாட்கள் வேலை செய்தால் போனஸ் என்ற சட்டத்தை அமலாக்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும், சட்டப்படியான போனசை 8.33 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த வேண்டும். அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் நியாயமான போனசை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. உடுமலை தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஜெகதீஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story